'கல்விச் சான்றிதழ்களுக்கு இணையாக, வேலைவாய்ப்பு உலகில் முகம்கொடுப்பதற்கு, கனதியான சான்றிதழ்களையும் மாணவர்கள் பெற்றிருத்தல் வேண்டும்.' - எனும் நோக்கோடு அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் U.L நசார் Sir அவர்கள் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் இல்ல விளையாட்டுப் போட்டியிலும் மற்றும் பாடசாலையில் Cricket அணியினை உருவாக்கும் முகமாகவும் பாடசாலை அதிபர் ஜனாப் U.L நசார் Sir அவர்களினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேரடி கள அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir, கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் Eng. ஏ.எம். சாகிர் Sir, A.B. அஸ்வர் Sir, M.M.M. றிஸ்வான் Sir, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் M.S.M நுஸ்கி மற்றும் Cricket ஆர்வளர்களும் இணைந்து Indoor Cricket விளையாட்டில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment